ஆளுநர் மிகவும் ஆபத்தானவர்-திருமாவின் சர்ச்சையான கருத்து!!

எந்த ஊர் ஆளுநருக்கும் இல்லாத வகையில் நம் தமிழகத்தில் ஆளுநராக உள்ள ரவிக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது. முன்னதாக அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் வழியருகே போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஆளுநர் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கருத்து கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநர் மிகவும் ஆபத்தானவர் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் பேசுகிறார், அரசியல்வாதியை போல் பேசுகிறார், அதனால்தான் ஆளுநர் மிகவும் ஆபத்தானவர் என்றும் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இலங்கைக்கு மத்திய அரசு உதவி செய்து கொண்டு வருகிறது. இது பற்றியும் அவர் கருத்து கூறியுள்ளார். இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் மற்றொரு நாட்டு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட பார்க்கிறது என்றும் கூறியுள்ளார்.

அரசியல் சார்பற்றவர்களை சர்ச்சைக்குள்ளாக்குவதுதான் பாஜகவின் திட்டம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment