எங்களின் முழு ஆதரவு சூர்யாவுக்கு தான்! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி;

நடிப்பின் நாயகன் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வருகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமலஹாசன் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

ஜெய் பீம்

இந்த நிலையில் வன்னியர் சமூகத்தினர் இந்த ஜெய்பீம்  திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூர்யாவிற்கு அச்சுறுத்தலும் மிரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்.

அதன்படி ஒரு கலைத்துறையினரை அச்சுறுத்துவது ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விராலிமலையில் பேட்டியளித்துள்ளார். திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்பது ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட உரிமை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறினார்.

ஜெய்பீம்   திரைப்படத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அங்கீகாரம் அளித்த சென்சார் போர்ட்டை தான் கேள்வி கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறினார். சூர்யாவுக்கும், ஜெய்பீம் படக்குழுவினருக்கும் முழு ஆதரவு அளிப்பது தான் தற்போது எங்களது நிலைப்பாடு என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment