Connect with us

விக்ரம் படத்தின் OTT உரிமையை.. கைப்பற்றியது இந்த முன்னணி நிறுவனமா?…

vikram pic

Entertainment

விக்ரம் படத்தின் OTT உரிமையை.. கைப்பற்றியது இந்த முன்னணி நிறுவனமா?…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் OTT உரிமம் சம்பந்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

vikram 1

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

‘பீஸ்ட்’ ரிலீஸ்!! எந்த நாள் ? எந்த தளத்தில் ? முழு தகவல் !!

இந்தப் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

vikram 2

சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

vikram

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் இந்த அறிவிப்பை, கமல் ஹாசன் உடன் ஸ்டார் நிறுவன அதிகாரிகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படத்தயாரிப்பு நிறுவனம் RKFI வெளியிட்டுள்ளது.

அட்லி படத்தில் நயன்தாராவுடன் இவரா?.. அப்போ மாஸ் தான்!!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top