ஒடிடி தளங்கள் மீது இயக்குனர் சீனு ராமசாமி கடும் விமர்சனம்!

தமிழில் கூடல் நகர் படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர்  அந்தகூடல் நகர் படம் மட்டுமே மசாலா டைப் படமாக இயக்கினார் மற்ற படங்கள் எல்லாம் கருத்து சொல்லும் படங்களாக விருது வாங்கும் டைப் படங்களாக இயக்கினார்.

தென் மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட இவரின் படங்கள் முக்கியமான படங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாகும்.

இந்நிலையில் கருத்து கூறியுள்ள இவர் ஓடிடி தளங்கள் வட்டி வசூலிப்பதாகவும், நிறுவனங்கள் தயாரிப்பாளர்களை நடத்தும் விதம் குறித்தும் கூறியுள்ளார்

அந்த ட்விட்டர் பதிவில், சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தயாரிப்பாளரிடம் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள்.

கண்டண்ட் பேஸ்ட் படங்களும் தயாரிப்பாளர்களும் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை கதை படங்கள் வளரும் புதியவர்கள் தழைப்பர்?”என இவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment