3 நாளைக்கு வெளியூர்க்காரர்கள் சென்னைக்கு வராதீங்க!-முதல்வர் கோரிக்கை;

தமிழகத்தின் தலைநகரமாக விளங்குகிறது சென்னை மாநகரம். இதனை சிங்கார சென்னை, வந்தாரை வாழவைக்கும் பூமி என்று பல்வேறு பெயர்களால் வழங்குவர். ஆனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின்

தமிழகத்தில் தொடர் கனமழை எதிரொலியால் சென்னைக்கு யாரும் மூன்று நாட்களுக்கு வர வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அதன்படி கடந்த தீபாவளியன்று ஊருக்கு சென்றிருந்த வெளியூர் வாசிகள் இன்னும் இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தீபாவளிக்காக ஊருக்கு சென்று உள்ள மக்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னை வர முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதனால் தீபாவளி  விடுமுறைக்காக வெளியூருக்கு வந்துள்ள மக்கள் மூன்று நாட்களுக்கு சென்னைக்கு செல்ல முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment