நகை சரிபார்ப்புக்கு அனுமதிக்க மாட்டோம்.. தீட்சிதர்கள் கடிதம்!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்புக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என தீட்சிதர்கள் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் தங்களது நம்பகத்தன்மையை நிரூபிக்கபதற்காக கடந்த 2005-ம் ஆண்டில் நகைகளை சரிபார்க்க ஒத்துழைப்பு கொடுத்தாகவும், அத்தகைய பணியானது 28.9.2022-ம் ஆண்டில் நிறைவடைந்து விட்டதாக கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நகை சரிபார்ப்பில் எந்த குறைபாடு மற்றும் குளறு படி இல்லாத சூழலில் மீண்டும் நகைகளை சரிபார்க்க தங்களது துறைக்கு அதிகார வரம்போ, சட்டரீதியான உரிமையோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பட்டயம்பெற்ற தணிக்கையாளர் மூலமாக நகை சரிபார்ப்பு மற்றும் கணக்குகள் ஆகியவை தற்போது வரையில் சரியாக உள்ளதாக தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய சூழலில் நாளைய தினத்தில் நடைபெறும் நகைசரிபார்ப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என  இந்து சமயநிலைத்துறை ஆணையத்திற்கு கடிதம் மூலம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய கடிதம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.