OSCAR 2023: சிறந்த நடிகர், நடிகை டூ அனிமேஷன் திரைப்படம் வரை – ஆஸ்கர் விருதுகள் முழு பட்டியல் இதோ!

OSCAR 2023: சிறந்த நடிகர், நடிகை டூ அனிமேஷன் திரைப்படம் வரை – ஆஸ்கர் விருதுகள் முழு பட்டியல் இதோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

7 ஆஸ்கர் விருதுகளைக் குவித்த படம்:

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ( Everything Everywhere All At Once) என்ற திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கியுள்ளது.

– சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

– சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் நடித்த மிஷ்ஷெல் யோ-விற்கு வழங்கப்பட்டுள்ளது.

– சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தை இயக்கிய இயக்குநர்களான டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.

– சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதை வென்றது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.

– சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’படம் வென்றது.

– சிறந்த துணை நடிகைக்கான விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் ஜேமி லீ கர்டிஸூக்கு வழங்கப்பட்டது.

– சிறந்த துணை நடிகருக்கான விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் கீ ஹ்யூ குவானுக்கு வழங்கப்பட்டது.

– சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படத்திற்காக மிஷ்ஷெல் யோ வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்திய திரைப்படங்கள் சாதனை:

சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) முதுமலையில் தயாரான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.

முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்கா விருதை பெற்றனர்.

சிறந்த பாடல் ஆகிய இரு பிரிவுகளுக்கான தேர்வுப் பட்டியலில் நுழைந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவின் இறுதிப் பட்டியலில் தேர்வாகி இப்போது ஆஸ்கரை வென்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்குப் படம் ஒன்று ஆஸ்கர் விருதை வென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற விருதுகள்:

– சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’ திரைப்படம் தட்டிச் சென்றது.

– ’Everything All At Once’ படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்.

– சிறந்த ஆவணப்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படமான‘All That Breathes’-க்கு விருது கிடைக்கவில்லை.

– சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை ‘The Whale’ படம் வென்றது.

– சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த “ALL QUIET ON THE WESTER FRONT” திரைப்படம் வென்றது.

– சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ரூத் கார்டர் “BLACK PANTHER: WAKANDA FOREVER” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது

– சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை பெற்றது Avatar: The Way of Water.

– சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘All Quiet on the Western Front’ திரைப்படம்

– சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது ‘All Quiet on the Western Front’ திரைப்படம்

– சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது “The Boy, the Mole, the Fox and the Horse”

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.