இசைக்குயில் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் இசைப்புயல்! லதா மங்கேஷ்கருடன் இருந்த தருணங்கள் பகிர்ந்த ஆஸ்கார் நாயகன்!!
இந்தியாவின் பழம்பெரும் இசைக்குயிலாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். லதா மங்கேஷ்கருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்றையதினம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறி இருந்தது. இந்த நிலையில் இன்று காலை இசைக்குயில் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி அன்பு, மரியாதை, பிரார்த்தனையை லதா மங்கேஷ்கருக்கு உரித்தாக்குகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
மிக மிக வருத்தம் தரும் நாள்; லதா மங்கேஷ்கர் பாடகி மட்டுமல்ல அவர் நம் ஆத்மாவின் அங்கம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் கூறினார். இந்தியாவின் இந்திய தன்மையில் மனசாட்சி லதா மங்கேஷ்கர் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
இந்துஸ்தானி இசை, உருது, இந்தி, உட்பட பல மொழிகளில் பாடியவர் லதா மங்கேஷ்கர் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார். லதா மங்கேஷ்கர் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
லதா மங்கேஷ்கர் பாடிய சில பாடல்களுக்கு இசை அமைக்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றும் கூறினார். லதா மங்கேஷ்கர் உடன் சேர்ந்து சில பாடல்கள் பாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது என்றும் ரகுமான் கூறினார்.
லதா மங்கேஷ்கர் உடன் இசை நிகழ்ச்சியில் பாடியபோது மேடையில் எப்படி பாடுவது என்பதை நான் கற்றுக் கொண்டேன் என்றும் ரகுமான் கூறினார். இசையமைப்பாளர் நவ்சாத் 11 நாட்கள் பயிற்சி எடுக்க கூறுவார் என்றார் லதா மங்கேஷ்கர் என்றும் கூறினார்.
தான் உடனே கற்றுக் கொண்டாலும் 11 நாட்கள் பயிற்சி செய்ய கூறுவார் என்றார் லதா மங்கேஷ்கர் என்றும் ஏ.ஆர்.ரகுமான் கூறினார். அன்பு ,ஆத்மா ஈடுபாட்டுடன் சிறப்பான இசையை வழங்க எவ்வளவு நேரம் செலவிட்டு உள்ளனர் என்பதை உணர முடிந்தது என்றும் ஏ ஆர் ரகுமான் கூறினார்.
