Connect with us

மணிரத்னம் படத்தில் விஜய்! ரசிகர்கள் கொண்டாட்டம்

பொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் விஜய்! ரசிகர்கள் கொண்டாட்டம்

eb9d2318ef5a1d540460a35cf0aa9790-1

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு சிம்பு மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருவதால் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி நல்ல வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. ‘ஒரு விரல் புரட்சி என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர்.

516af562d9852e0bcf4947f632c9e972-2இந்த நிலையில் இந்த பாடல் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கின் திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த திரையரங்கில் செக்கச் சிவந்த வானம் திரையிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் இடைவேளையில் இந்த பாடல் ஒளிபரப்பானதால் விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top