ஒரு தலை ராகம் நடிகர் கைலாஷ்.. கடைசி வரை திறமைக்கு கிடைக்காத மதிப்பு..!

டி.ராஜேந்தரின் முதல் திரைப்படமான ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்தவர் நடிகர் கைலாஷ்நாத். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவரது திறமையை நிரூபிக்கும் வகையில் அவரால் ஒரு படத்தில் கூட ஹீரோவாக நடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு கடைசி வரை இருந்தது.

ஹீரோவுக்கு நண்பர், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் அவர் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். ஒரு தலை ராகம் திரைப்படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்த நிலையில் அந்த படத்தில் உள்ள ஜாலியான கேரக்டரில் அவரும் ஒருவர். கிளைமாக்ஸ்சில் நாயகி, நாயகன் மேல் உள்ள காதலை பூட்டியே வைத்திருந்த நிலையில் இவரது கேரக்டர் தான் அந்த காதலை வெளிப்படுத்த வைக்கும்.

தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!

kailashnath2

கேரளாவை சேர்ந்த நடிகர் கைலாஷ்நாத் சிறுவயதிலேயே மிமிக்ரி கலைஞராக இருந்தார். பள்ளி கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தினார். பிரபல நடிகர்களை போலவே அச்சு அசலாக பேசுவார்.

இதனையடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால் அவர் சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடன் படித்தவர்கள் தான் நாசர், சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள்.

இந்த நிலையில்தான் நடிகர் கைலாசநாத்துக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து மலையாளத்தில் பல வாய்ப்புகளை அவர் பெற்றார். இந்த நிலையில் ஒரு தலை ராகம் திரைப்படத்தில் அவருக்கு கல்லூரி மாணவர் தும்பு என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் கூடையில கருவாடு என்ற பாடலுக்கு செம நடனம் ஆடியிருப்பார்.

ஒரு தலை ராகம் சங்கர் 200 படங்களில் நடித்துள்ளாரா..? இப்போது இங்கிலாந்தில் செட்டில்..!

ஒரு தலை ராகம் படம் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அடுத்ததாக பாலைவனச் சோலை என்ற படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை வரும் ஒரு வித்தியாசமான வேடம் கிடைத்தது. அதன் பிறகு எச்சில் இரவுகள் உட்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அதனையடுத்து அவர் முழுக்க முழுக்க மலையாளத்தில் தான் கவனம் செலுத்தினார். மலையாளத்தில் பல படங்களில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

kailashnath1

தமிழில் அவர் ‘மனிதன் ஒரு பொம்மை’ என்ற திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சித்ததாகவும் ஆனால் அவரது முயற்சி பலிக்காததால் அந்த படம் தொடங்கவே இல்லை என்றும் கூறப்பட்டது.

நடிகர் கைலாஷ்நாத், அஜிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கைலாஷ்நாத் கடந்த (2023) ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது 65வது வயதில் காலமானார்.

ஒருதலை ராகம் ரவீந்தரை ஞாபகம் இருக்கின்றதா? இப்போது அவர் ஒரு தொழிலதிபர்..!

ஒரு தலை ராகம் படத்தில் தொடங்கிய பயணம் நீண்டதாக இருந்த நிலையில் அவரது திறமைக்கு ஏற்ற வேடம் கிடைக்கவில்லை என்பது தான் அவருக்கு நெருக்கமானவர்களின் ஆதங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews