கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு:குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடை!

இன்று காலை முதலே தமிழகத்தில் முதல்வரின் பேச்சு அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால் அவர் காலை முதலே பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். முதலாவது பேருந்துகளில் சென்று இலவச பேருந்து பயணம் குறித்து பெண்களிடம் கருத்து கேட்டார்.

ஸ்டாலின்
 

அதன் பின்னர் தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு வண்ணங்களுடன் உருவான தமிழ் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

காஞ்சி, சேலம், கோவை பட்டு சேலைகள், சின்னாளப்பட்டி பட்டு,பருத்தி சேலைகளின் புதிய வடிவமைப்புடன் தமிழ்த்தறி வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

திண்டுக்கல், பரமக்குடி பருத்தி சேலைகள் வடிவமைப்பு, வண்ணங்களும் தமிழ்த்தறி தொகுப்பில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கோ-ஆப்டெக்ஸ் பட்டு சேலை சரிகையில் தங்கம், வெள்ளி அளவீடுகளை உறுதிசெய்ய சரிகை உத்தரவாத அட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை ரகங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்ய புதிய செயலியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment