Connect with us

தேவையில்லாத ஆர்டர்லிகள் முறை… டிஜிபி புதிய உத்தரவு!!

தமிழகம்

தேவையில்லாத ஆர்டர்லிகள் முறை… டிஜிபி புதிய உத்தரவு!!

தமிழகத்தில் ஆங்கிலேயர் கால கட்டத்தில் இருந்த ஆர்டர்லி முறை தற்போது நடைமுறையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையாக சாடியிருந்தார். இதனால் அவசரமாக டிஜிபி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏடிஜிபிக்கள் மகேஷ் குமார் அகர்வால் ஏடிஜிபி சங்கர் ஐஜி லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் ஆர்டர்லி முறைக்கு எதிராக பல்வேறு கருத்துகளை நீதிமன்றம் கூறி வரும் சூழலில் தற்போது டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அதன் படி, அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக் கூடிய ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி ஜி பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதோடு இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top