நாகை மீனவர்கள் 6 பேர் கைது; செப்.12ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு..!!

நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதன் படி, ஒரு படகில் 6 மீனவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 6 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.

அதோடு அவர்களில் இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மீனவர்கள் மன்னாரில் உள்ள மீன்வளத்துறை பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் வரும் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாகை மாவட்டத்தில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.