சேலத்தில் பிரபல தனியார் உணவகத்தில் பிரியாணி குழம்பில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் 5 ரோட்டில் பிரபல பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது.
அந்த உணவகத்திற்கு சென்ற 6 பேர் பிரியாணி வாங்கி சாப்பிட்ட போது அவர்களுக்கு தால்சா எனப்படும் குழம்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை வாங்கி சாப்பிடும் போது குழம்பில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடையில் மேலாளரை அழைத்து அவர்கள் முறையிட்டனர்.
அப்போது இரு தரப்பிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில் புழு இருந்தாக கூறியதை பிரியாணி கடை மேலாளர் மறுத்துள்ளார். உணவுக்கு பணம் தராமல் தப்பிக்கவே இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து புழு இருப்பதாக தகராறில் ஈடுபட்ட 6 பேரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாக இயங்கிவரும் பிரியாணி கடையில் தற்போது புகார் எழுந்துள்ளதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது சம்மந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.