அவசர நிலை பிரகடனம் வாபஸ்! உடனடியாக அமலுக்கு வர உத்தரவு…!
கடந்த சில மாதங்களாக இலங்கை அரசு மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இலங்கையில் நாளுக்கு நாள் பணவீக்கத்தின் நிலை அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
எனவே மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக இலங்கையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் பகுதியான யாழ்ப்பாணம் பகுதியில் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நெருக்கடியான சூழ்நிலையில் நாடாளுமன்றம் நடந்தது. இந்த நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இருப்பினும் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியினரிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கோத்தபய ராஜபக்ச கூறியிருந்தார்.
இவ்வாறு உள்ள நிலையில் தற்போது அவர் அவசரநிலைப் பிரகடனத்தை வாபஸ் பெற்றதாக காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும், இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் திரும்ப பெறப்பட்டது உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தகவல் அளித்துள்ளார்.
