அடித்து துன்புறுத்துவதாக புகார்.. கருணை இல்லத்திற்கு சீல் வைக்க உத்தரவு!!!

முதியோரை கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கருணை இல்லத்திற்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள குகை நகர் கிராமத்தில் புனித ஜோசப் கருணை இல்லம் என்று முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் முதியோர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், முறையாக உணவு வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது.

வேறு நபருடன் ரிலீஸ் செய்த மனைவி: கணவரால் நேர்ந்த விபரீதம்..!!!

இதன் காரணமாக நேற்றைய தினத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர் ஆய்வு நடத்தியதில் அவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் 66 முதியோர்களுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது முதியோர் இல்லத்திற்கு சீல் வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் குமார பாண்டியன், வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீண்டும் அதிர்ச்சி!! 9-வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற மாணவன்..!!

மேலும் முதியோர் இல்லத்தை நடத்தி வந்த உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமார பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment