
தமிழகம்
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!! சென்னையில் பரபரப்பு;;
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூம் எடுத்திற்கும் நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை செயலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் எப்போதும் சுயநலமாக செயல்படுவார் என இபிஎஸ் கூறியிருப்பது ஓபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் மோதல்கள் போர்க்களமாக மாறியுள்ள அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
