Connect with us

அதிமுக அலுவலகத்திற்கு சீல்-சரியாக நாளை மதியம் 02:15 மணிக்கு உத்தரவு.!!

ADMK Office

தமிழகம்

அதிமுக அலுவலகத்திற்கு சீல்-சரியாக நாளை மதியம் 02:15 மணிக்கு உத்தரவு.!!

ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அன்றைய தினம் தான் அதிமுகவில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. அந்த ஒரே நாளில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஏனென்றால் அன்றைய தினம் பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதனால் அலுவலகத்தின் முன்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

மேலும் அங்கு கலவரம் நீடித்ததால் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. நாளைய தினம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களிடம் விசாரணை நடைபெறும் என்றும் ராயப்பேட்டை போலீசார் தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டத்தின் தொடர்பாக நாளைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை மதியம் 02:15  மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top