News
நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? பதிலளிக்க ஆணை!!
தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நில அபகரிப்பு காணப்படுகிறது. மேலும் அரசு நிலங்கள் கூட பலரும் அபகரித்து விடுகின்றனர். மேலும் பல நீர் நிலைகளில் கூட நிலத்தை அபகரித்து அங்கு கட்டடங்கள் கட்டி விற்கப்பட்டு வருகிறது. மேலும் நம் தமிழகத்தில் வனப் பகுதிகளில் அவ்வப்போது நில அபகரிப்பு காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பல ரியல் எஸ்டேட் தொழில் நில அபகரிப்புகள் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க நம் தமிழகத்தில் நில அபகரிப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் இந்த நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதன்படி நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு ஆணையிட்டுள்ளது.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் இது குறித்து சரியான பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 2011 இல் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் 2012ல் தொடரப்பட்ட நில அபகரிப்பு புகார்கள் கூட இன்னும் நிலுவையில் தான் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
