ஆறுக்காக புகார் அளித்த மீனவர்! ஆற்றில் கொட்டிய கழிவுகளை அகற்ற ஆணை!!

மனிதனுக்கு குடிநீர் ஆதாரமாக காணப்படுகின்ற ஆறுகளில் தொடர்ந்து ரசாயன கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. இதை அவ்வப்போது அகற்றப்பட்டால் பெரும்பாலான ஆறுகளில் அதிகமாக ரசாயன கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், குப்பைகள் கலக்ககின்றன.கொற்றலை

இதுகுறித்து தற்போது ஹைகோர்ட் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி கொற்றலை ஆற்றில் கொட்டிய கழிவுகளை அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆற்றில் நீர் வழிப் பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான கழிவுகளை அகற்ற மின் வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி  வினியோகிக்கும் கன்வேயர் அமைக்க கொற்றலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்பட்டன. அனுமதிக்கப்பட்ட பாதையை விடுத்து சுற்றுச்சூழல் அனுமதியை மீறி கட்டுமானங்கள் நடைபெறுவதாக ஐகோர்ட்டில் மனுதாக்கல்.

கொற்றலை  ஆற்றின் உட்பகுதியில் தளம் அமைத்து கன்வேயர் பெல்ட் கொண்டு செல்ல பணி நடப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் செல்வராஜ் துரைசாமி மின்வாரியத்தின் மீது ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, பி.டி .ஆதிகேசவலு இடம்பெற்ற அமர்வு, கட்டுமானக் கழிவுகளை அகற்ற ஆணையிட்டுள்ளது.

நீர் வழிப் பாதையில் கட்டுமானக் கழிவுகளை அகற்றுவது குறித்து அறிக்கை தரவும் மின்வாரியத்துக்கு நீதிபதிகள் ஆணை பெற்றுள்ளனர். வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment