புதைந்த வழக்கை தோண்டி எடுத்த ஹைகோர்ட்; 2016ல் ஏற்பட்ட விபத்து பற்றி விசாரிக்க ஆணை!!

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு சென்னை ரயில் நிலையத்தில் வெட்டி கொல்லப்பட்ட சுவாதி விவகாரத்தில் ராம்குமார் சிறையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

உயர்நீதிமன்றம்

இதனை மீண்டும் எடுத்து தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் விசாரணை நடைபெற்றிருக்கிறது. அதனைப் போன்றே மற்றொரு சம்பவத்தையும் விசாரிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

அதன்படி விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் விபத்தில் சிறுமி உயிரிழந்தது தொடர்பாக மீண்டும் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது.

2016ம் ஆண்டில் ராட்சத ராட்டினம் முறையாக இயக்கப்படாததால் மகள் உயிரிழந்துள்ளதாகவும் மனைவி காயமடைந்ததாகவும் பாபு என்பவர் புகார் அளித்துள்ளார். நீலாங்கரை காவல்துறை உரிய விசாரணை நடத்தாமல் விஜிபி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் மனுதாரர் பாபு புகார் அளித்துள்ளார். இதனால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ள ஹை கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment