Connect with us

ஆக.13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற உத்தரவு.!!

national flag

செய்திகள்

ஆக.13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற உத்தரவு.!!

கொரோனாவுக்கு எதிராக இந்தியா 2020 ஆம் ஆண்டு முதல் போராடிக் கொண்டு வருகிறது. இந்த போராட்டம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதன்படி கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றும் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான வரலாறு தருணத்தை காணப்போகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். உலகெங்கிலும் ஆயுர்வேதம் உள்ளிட்ட மருந்துகள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

அதோடு பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு இளைஞர் வாஞ்சிநாதன் தண்டனை வழங்கிய இடம் மணியாச்சி என்றும் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வே பங்களிப்பை அறிய வேண்டும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி பேசிய கொண்டு வருகிறார்.

சுதந்திர தினத்தை ஒட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்திட துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும் என்றும் கேள்வினை எழுப்பினார். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே முழக்கங்களை உச்சரித்த படி நமது நாட்கள் கழிந்திருக்கும் என்றும் பிரதமர் மோடி நினைப்பூட்டினார்.

வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்வை அர்ப்பணித்திருப்போம்; இளமையை துறந்திருப்போம் என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top