Connect with us

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக 25,000 கோழிகளை அழிக்க உத்தரவு: மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

202101051450179890 Bird flu is declared as statespecific disaster in Kerala SECVPF

செய்திகள்

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக 25,000 கோழிகளை அழிக்க உத்தரவு: மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக 25,000 கோழிகளை அழிக்க உத்தரவு: மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அந்த வகையில் மாகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள வெஹ்லோலி கிராமத்தில் உள்ள 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள வெஹ்லோலி கிராமத்தில் கடந்த சில நாட்களாக அங்குள்ள கோழிப்பண்னையில் சுமார் 100 மேற்ப்பட்ட கோழிகள் இறந்துபோயின. இதன் காரணமாக அங்குள்ள 25,000 கோழிகளை அடுத்த சில நாட்களுக்குள் அழிக்க மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜே நர்வேகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இவற்றின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பட்டதாகவும், பறவைக் காய்ச்சல் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்கு கால்நடை பராமரிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top