
Tamil Nadu
கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்குள் முடிக்க உத்தரவு!!
கோவில் திருவிழா என்றாலே அங்கு பாட்டு கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி காணப்படும். அதுவும் ஒரு சில ஊர்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு விதமான நாட்டுப்புற கலைகள், கச்சேரிகள் நடத்தப்பட்டு திருவிழா கொண்டாடப்படும்.
இந்த நிலையில் திருவிழாவுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய வழக்கில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
