Connect with us

5 மணியுடன் கடைகளை அடைக்க உத்தரவு: வணிகர்கள் அதிர்ச்சி!

Tamil Nadu

5 மணியுடன் கடைகளை அடைக்க உத்தரவு: வணிகர்கள் அதிர்ச்சி!

f2b322054670da1b68e4ab093611bfa5-2

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே 

குறிப்பாக கோவையில் 6 மணியுடன் கடைகளை அடைக்க வேண்டும் என்றும் ஈரோடு மாவட்டத்தில் 5 மணியுடன் கடைகளை அடைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்திலும் அதே போன்ற ஒரு அறிவிப்பை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் மாலை 5 மணிக்கு கடைகள் மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் அனைத்து வகைகளிலும் மாலை 5 மணிக்கு மூடப்பட்டு வருகின்றன என்பதால் வணிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதேபோன்ற நிலை சென்னைக்கு மிக விரைவில் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top