Connect with us

முழு அர்ப்பணிப்போடு செயல்பட உத்தரவு! இது மிகுந்த வருத்தம் தருகிறது?

cm stalin

Tamil Nadu

முழு அர்ப்பணிப்போடு செயல்பட உத்தரவு! இது மிகுந்த வருத்தம் தருகிறது?

முழு அர்ப்பணிப்போடு செயல்பட உத்தரவு! இது மிகுந்த வருத்தம் தருகிறது?

இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் உங்கள் தொகுதியில் முதல்வர் துறையில் வரும் புகார்கள் அனைத்தும் உடனுக்குடன் நடவடிக்கை வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் அனைவரும் நேர்மையாக வெளிப்படைத் தன்மையோடு முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு பயனளிக்கும் முன்னெடுப்புகளை விளக்கமாக தெரிவித்தால் அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்க போலீஸ் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் ஸ்டாலின் கூறினார். வாகன விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top