
தமிழகம்
வேகமெடுக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு !!
கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சரிவை நோக்கி கொண்டிருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்கிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவில் மே 24-ஆம் தேதி வரையில் 15,208 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூன் மூன்றாம் தேதி இவற்றைப் பார்க்கும்போது 21 ஆயிரத்து 55 நபர்களுக்கு பாதுப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொற்று சதவீதம் என்பது 0.52 முதல் 0.78 ஆக உயர்ந்து இருப்பதாக அவர் கூறினார். இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்காக குறிப்பாக முன்னெச்சரிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பரிசோதனைகளை அதிகரித்தல், கூட்டம் கூடாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் மரபணு மாறிய புதிய கொரோனா நோய் தொற்று பரவுகிறதா? என்பதை கண்டறிதல் போன்றவைகளை தொடர்ந்து மேற்கொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார்.
