Connect with us

அரசு, தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு?

education department

தமிழகம்

அரசு, தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு?

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியது. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் படி, முதல் கட்டமாக யூனிட் தேர்வு என்ற அலகு தேர்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அலகு தேர்வுகளை நடத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு தனித்தனியாக தேர்வு அட்டவணை அனுப்பப்பட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த மாதம் நடைபெறும் தேர்விற்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் முன்கூட்டியே பாடங்களை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top