நூலகத்திற்கு அனுமதி என உத்தரவு: மாணவர்கள் மகிழ்ச்சி!

be05fb32e9133e158d816aab6610d8d9-2

இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் மேலும் ஒரு தளர்வாக இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் நிபந்தனைகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நூலகத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் நூலகத்தில் புத்தகம் படிப்பவர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நூலகங்கள் திரக்க அனுமதி அளித்துள்ளது அடுத்து தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment