
செய்திகள்
3 மாவட்டங்களில் அதிகனமழை: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
3 மாவட்டங்களில் அதிகனமழை: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது மூன்று மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அவற்றில் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேற்கண்ட மூன்று மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
