தமிழகத்திற்கு நாளை வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவுகிறது. இவ்வாறு இருந்தாலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதன் எதிரொலியாக தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை தினம் வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக நாளையும் மிக கனமழைகான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த கோடை காலத்தில் இவ்வாறு கன மழை பெய்வது மக்களுக்கு இதமான நிலையை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment