14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

வடகிழக்கு பருவ மழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இருந்து ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்றும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்கள் பின்வருமாறு: கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர்

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்கள் பின்வருமாறு: தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment