5 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்யும்: ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை!

இன்று இரவு விடிய விடிய முதல் நாளை காலை எட்டு முப்பது மணி வரை 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாளை காலை எட்டு முப்பது மணி வரை நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இதனை அடுத்து அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதிக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது 5 மாவட்டங்களில் நாளை காலை வரை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment