கேரளாவுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்: வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு என தகவல்

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக கனமழை பெய்து மண்சரிவு வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது என்பதும் இதனால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மீண்டும் கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அம்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளாக்கியது

கேரள மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் வரும் ஞாயிறு வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

இதன் காரணமாக மீண்டும் கேரளாவில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் கனமழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print