இன்னும் சில நிமிடங்களில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மிக கன மழை கொட்ட போகிறது என நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் கனமழை எச்சரிக்கை குறித்த செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு ஒன்றில், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விளக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்க படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த 4 மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment