5 மாவட்டங்களில் கனமழை: ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மழை பெய்யும் வட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை.

அதேபோல் நாளை மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment