ஆரஞ்சு அலர்ட்! நவ.1,2-ம் தேதிகளில் கனமழை பெய்யும்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் அக்டோபர் 2-வது வாரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

நகை பாலிஷ் போட்டு தருவதாக மோசடி – 2 பேர் அதிரடி கைது!!

இந்நிலையில் கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, கேரளா, மாஹே, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் அறுவை சிகிச்சை! “ ரூ.5 லட்சம் ” கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

மேலும், சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment