தமிழ்நாட்டில் நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டுக்கு வருகிற 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது.

மழை

நாளைய தினம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இதர கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை மட்டும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment