Connect with us

மீண்டும் நிற எச்சரிக்கை! தமிழகத்திற்கு நாளை மறுநாள் ‘ஆரஞ்ச் அலர்ட்’….!!!

ஆரஞ்ச் அலர்ட்

News

மீண்டும் நிற எச்சரிக்கை! தமிழகத்திற்கு நாளை மறுநாள் ‘ஆரஞ்ச் அலர்ட்’….!!!

மீண்டும் நிற எச்சரிக்கை! தமிழகத்திற்கு நாளை மறுநாள் ‘ஆரஞ்ச் அலர்ட்’….!!!

தமிழ்நாட்டுக்கு கிழக்கே தென் வங்க கடல் பகுதியில் தற்போது நிலவி கொண்டிருக்கின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் நாளையதினம் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நிற எச்சரிக்கையை தமிழ்நாட்டுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்ய உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் மார்ச் 4ஆம் தேதி 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top