நம் தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த சூழலில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் மெல்ல மெல்ல மழை குறையத் தொடங்கியது. ஆயினும் அவ்வப்போது பல இடங்களில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் மதியத்திற்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறியிருந்தது.
இவ்வாறுள்ள நிலையில் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற வட தமிழக மாவட்டங்கள் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.