கவனமா இருங்க!! 12 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!!

கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் 12 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே போல் நாளை தினத்தில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் நாளைய தினத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வருகின்ற செப்.9-ம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மலைப்பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment