தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் விருப்ப ஓய்வு! சட்டப்பேரவை தேர்தல் தான் காரணமா?
பிப்ரவரி மாதம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளது. ஏனென்றால் பிப்ரவரி மாதத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் பலவும் தேர்தல் வாக்குறுதிகளையும், வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்துக் கொண்டே வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதால் தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் விருப்ப ஓய்வு அளித்து உள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு விருப்ப ஓய்வு அளித்துள்ளார்.
ஓய்வு பெற இன்னும் மூன்று மாதம் உள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜக்மோகன் சிங் ராஜு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான ஜக்மோகன் சிங் ராஜு, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றியவர்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஜக்மோகன் சிங் ராஜு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். விருப்ப ஓய்வில் செல்வதாக ஜக்மோகன் சிங் ராஜு பதவி விலகல் செய்துள்ளார்.
