23 மீனவர்களுக்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஒபிஎஸ்!!

நம் தமிழகத்தில் தற்போது மழைக்காலம் நிகழ்வது மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் ஒரு தரப்பு மக்களுக்கு இது பெரும் சோதனையான காலமாக காணப்படும். அவர்கள் யாரென்றால் மீனவர்கள்தான்.மீனவர்

ஏனென்றால் மழைக் காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வது அபாயமான காரியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்படும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

இருப்பினும் மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் கூட அங்கு இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவார்கள். அதில் ஒரு சில நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசிடம் பல்வேறு தலைவர்கள் வலியுறுத்துவார்கள். அதன் தொடர்ச்சியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையின் செயல் மீனவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment