ஜெயிலுக்கே சென்ற ஓபிஎஸ்!! ஜெயக்குமார் தான் காரணமா? என்னவாக இருக்கும்?

இந்த மாதம் 19ஆம் தேதி இன்னும் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த முறை தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. ஆயினும் ஒரு சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் நடந்தது.

அதுவும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஆளுங்கட்சியின் தொண்டரை வன்மையாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குச்சாவடியில் அருகே இருந்த திமுக தொண்டரை வன்மையாக பேசியிருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் அவரது சட்டையை கழட்டி அரை நிர்வாணப்படுத்தி அந்த தொண்டரை அவமானப்படுத்தி இருந்தார். இதனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புழல் சிறையிலுள்ள ஜெயக்குமாரை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் சந்தித்தனர். திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment