Connect with us

ஓபிஎஸ்-க்கு வெறும் ஒரு சதவீதமே! 99 சதவீதமும் எடப்பாடிக்கு தான் ஆதரவு!!

eps ops main 750

தமிழகம்

ஓபிஎஸ்-க்கு வெறும் ஒரு சதவீதமே! 99 சதவீதமும் எடப்பாடிக்கு தான் ஆதரவு!!

முன்னாள் அமைச்சர்கள் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சில முக்கியமான தகவல்களை கூறிக் கொண்டு வந்துள்ளனர். ஏனென்றால் ஜூலை 11ஆம் தேதி அதிமுக சார்பில் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான இடத்தினை அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வு செய்து தற்போது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிறார் என்று கூறியுள்ளனர்.

செய்தியாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளனர். அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெறும் ஒரு சதவீதம் ஆதரவு மட்டுமே உள்ளது என்று கூறினார்.

அதேவேளையில் மீதமுள்ள 99 சதவீத அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என்று கூறினார். இதனால் 11-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வார்க்கிறார் என்றும் கூறியுள்ளார்.

சட்ட திட்ட விதிகளின்படி நடைபெறும் அதிமுக பொது குழுவை தடுக்க ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்புக்கு தார்மீக உரிமை கிடையாது என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top