குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் குஜராத்தில் நடைபெறும் வெற்றி விழா மற்றும் பதவி ஏற்பு விழாவுக்கு தமிழகத்திலிருந்து ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த ஜி-20 ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டனர். இதில் ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது அவரது தரப்பிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் வெற்றி விழா கொண்டாடும்போது ஓபிஎஸ் அழைக்கப்படுவார் என்றும் அப்போது அவரிடம் அரசியல் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாஜகவை பொருத்தவரை அதிமுக என்பது ஒன்றும் ஒருங்கிணைந்து அதிமுகவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்றும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்தால் மட்டுமே பாஜகவுக்கு லாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமியை முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்றும் அவர் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கழற்றி விடுவார் என்பதால் ஓபிஎஸ் பக்கமும் தனது பார்வையை பாஜக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈபிஎஸ் அணியுடன் கூட்டணி இல்லை என்றால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் ஒருசில திமுக அதிருப்தி கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.