நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற துடிக்கிறார் ஓபிஎஸ்! துரைமுருகன் கண்டனம்;

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீட் தேர்வுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அதிமுக வழங்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார். அதிமுக, பாஜக நாடகத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள், மாணவ சமுதாயம் தக்க பதிலடி தரும் என்று கூறியுள்ளார்.

நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற துடிக்கிறார் ஓபிஎஸ் என கண்டனம் தெரிவித்துள்ளார். நீட்தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு நுழையவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இன்று காலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதாக கூறியிருந்ததற்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment