அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவில் இணையும் ops! அண்ணாமலை அதிர்ச்சி தகவல்!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான கட்சியின் மூத்த தலைவர்கள் குழு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது லோக்சபா தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு பாஜகவினரை 20 சீட்டு கொடுத்தால் தான் அதிமுகவுடன் இணைவோம் என திடீரென பேச தொடங்கி உள்ளன. இதற்கு அதிமுக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுத்து வருகிறது. ஒரே நேரத்தில் கட்சியில் உள்ள அனைவரும் போட்டி போட போறீங்களா என்றும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தேர்தல் களத்தில் பிஸியாக இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடகா மாநிலத்துக்கான பாஜக பொறுப்பாளருமான அண்ணாமலை இடம் அதிமுக குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும் தமக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை என திட்டபட்டமாக அண்ணாமலை கூறினார்.

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி…115 அணிகள் பங்கேற்பு

அதே நேரத்தில் பாஜகவில் ஓபிஎஸ் இணைவாராய் என்கின்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு பொருத்திருந்து பாருங்கள் என ஒரு வரியில் மட்டும் அண்ணாமலை பதில் கூறியிருக்கிறார். அப்படியானால் அண்ணாமலை சொல்வதைப் போல தான் எதிர்காலத்தில் நடக்குமா என்கின்ற கேள்வி தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.