சொந்த தொகுதியில் விஜயபாஸ்கருக்கு ஆட்டம் காட்டிய OPS அணியினர்!!

விராலிமலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களினால் பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முழுவதும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்றும் இந்த படை தோற்றால் எந்த படை வெல்லும் என்றும் கூறபட்டுள்ளது.

அதே போல் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் ஒற்றை தலைமை ஏற்று எங்களை வழி நடத்திட வாரும் என்று அந்த போஸ்டரில் இடம் பெற்று உள்ளது.

விராலிமலை ஒன்றியம், வடுகப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்த ராஜகிரி சுப்பையா போன்றவர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து விராலிமலை தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

மேலும், இந்த போஸ்டர்களினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment