Connect with us

கட்சிக்குள் வெடித்த குண்டு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிடிவிக்கு வரவேற்பு!!

ops dinakaran

தமிழகம்

கட்சிக்குள் வெடித்த குண்டு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிடிவிக்கு வரவேற்பு!!

தமிழகத்தின் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பெற்று தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக ஏன் என்றால் கடந்த இரண்டு தேர்தலில் அதிமுக பெரும்பான்மை நிரூபித்து பத்தாண்டுகளாக ஆட்சி செய்தது.

அதன் பின்னர் அதிமுகவின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்பு மெல்ல மெல்ல கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக இரண்டு பிரிவாக பிரிந்தது.

அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருபுறமும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மறுபுறமும் மாறி மாறி தாக்கி கொண்டனர். மேலும் தலைமையிலும் தற்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அமமுக பொதுச் செயலாளரை வரவேற்றுள்ளது கட்சியின் இடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

தேனி மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டத்துக்கு சென்ற டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாவட்ட எல்லையில் வரவேற்றனர். தேனி ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சையது கான் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top